இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்


புத்தள, உனவடுன பிரதேசத்தில் நேற்று (12) சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காலை 8.53 முதல் 8.55 வரையான காலப்பகுதிக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளவை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியதன் பின்னணியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆனால் நேற்று நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதேனி பண்டார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *