மதுபான விருந்தில் குழு மோதல் – இளைஞர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்தவராவார்
சம்பவத்தில் படுகாயமடைந்த அதே இடத்தை சேர்ந்த மேலும் நால்வர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்