Day: June 9, 2022

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை அரசாங்கம் கையகப்படுத்துமா..?வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை அரசாங்கம் கையகப்படுத்துமா..?

வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை நட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மைத் தன்மை இல்லை என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து [...]

யாழ். அரியாலையில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து – இரு இளைஞர்கள் பலியாழ். அரியாலையில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி இருவர் அரியாலை பகுதியில் உயிரிழந்தனர். விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரதம் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலீசார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் [...]

முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லைமுகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

நாளை (10) முதல் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளக செயற்பாடுகள் போன்று பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை சுகாதார [...]

மாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்துமாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றதாக மாணவர்கள் மேலும் தெரிவித்தனர். ஹட்டன் [...]

கடும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் நடந்தேறிய நயன் – விக்னேஷ் திருமணம்கடும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் நடந்தேறிய நயன் – விக்னேஷ் திருமணம்

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் கடும் கட்டுப்பாட்டுக்குள் நடந்துள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், [...]

மனைவி வைத்தியசாலையில் – பக்கத்து வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்மனைவி வைத்தியசாலையில் – பக்கத்து வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்

திருகோணமலை – நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்ஷினி அண்ணாதுரை முன்னிலையில் குறித்த [...]

புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்புபுற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று [...]

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் பதற்றம்கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் பதற்றம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். கடந்த மே [...]

சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்தார். சோள [...]

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்புவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது [...]

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்திற்கு தடை உத்தரவுமின்சார பொறியியலாளர்கள் சங்கத்திற்கு தடை உத்தரவு

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன உட்பட அதன் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை, [...]

தஞ்சம் தேடிச் சென்ற இலங்கையர்களை திரும்பி அனுப்பிய அவுஸ்திரேலியாதஞ்சம் தேடிச் சென்ற இலங்கையர்களை திரும்பி அனுப்பிய அவுஸ்திரேலியா

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 [...]

மதுபான விருந்தில் குழு மோதல் – இளைஞர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்மதுபான விருந்தில் குழு மோதல் – இளைஞர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்தவராவார் சம்பவத்தில் [...]

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஜோடி மரணம்மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஜோடி மரணம்

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கதிர்காமம் கலஹிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரசித குமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் [...]

யாழில் ஆசிரியை தீயில் எரிந்து மரணம்யாழில் ஆசிரியை தீயில் எரிந்து மரணம்

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (08-06-2022) காலை [...]

மின் தடைக்கு காரணம் நாசவேலையாகவே கருத முடியும்மின் தடைக்கு காரணம் நாசவேலையாகவே கருத முடியும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றதாகவும் அவர் சாடியுள்ளார். பொது [...]