காதலியின் பெற்றோர் தாக்கியதால் மனவேதனைக்குள்ளான இளைஞன் தற்கொலை
மகளின் கைத்தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, அவரது காதலனை வீட்டுக்கு வரவழைத்து பெற்றோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மனவேதனைக்குள்ளான காதலன் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கட்டுக்குருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த இளைஞனின் கைப்பேசிக்கு நேற்று (08-06-2022) மாலை, காதலியிடம் இருந்து சில குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில் அவரது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாகொட, பிரதேசத்திலுள்ள காதலியினது வீட்டுக்கு இந்த இளைஞர் சென்றுள்ளார்.
இதன்போது காதலியின் பெற்றோர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவரது தேசிய அடையாள அட்டையையும் பறித்தெடுத்துள்ளனர்.
இதனால் மனவேதனைக்குட்பட்ட அந்தக் காதலன் நேற்று மாலை களுகங்கையில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.