வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி – மற்றையவர் படுகாயம்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
ஓமந்தை பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியாகியதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. .