பசிலின் அதிக சொத்துக்கள் பல நடேசனின் பெயரில் பதுக்கல் – அம்பலப்படுத்திய அநுர
“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில் கூட பாரிய ஊழல்கள் உள்ளன.” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் கீழ் ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ எனும் அமைப்பால் கொழும்பு மன்றத்தில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில்,
“எயா பஸ்களை வாங்குவாறு, பிரான்ஸின் எயா பஸ் நிறுவனம் அழுத்தம் பிரயோகித்து உள்ளது. இது குறித்து சர்வதேச விசாரணை இடம்பெற்றது. இது தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த எயா பஸ்களை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் கூட்டம் நடந்துள்ளது. சமல் ராஜபக்சவின் மகனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார். எயா லங்கா நிறுவனத்தில் அவர் பதவி வகித்துள்ளார்” என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
யோசித ராஜபக்சவின் காணிகள் குறித்த தகவல்களும் அம்பலப்படுத்தப்பட்டன.