பொலிஸ் உத்தியோகஸ்த்தரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி
கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளி ஒருவனை விசாரிக்க முயன்றபோது பொலிஸ் அதிகாரி மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு குற்றவாளி தப்பிச் சென்றுள்ளான்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
மாளிகாவத்தை மில்டன் பெரேரா வீதியில் கால்டன் முன்பள்ளி எதிரில் உள்ள குறுக்கு வீதியில் வைத்து பிரபல குற்றவாளி ஒருவர், பொலிஸ் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரி.எம்.ஏ.டி. குமார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடந்த கொள்கை சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாடு குறித்து பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
வீடுகளில் கொள்ளையிட்ட பிரபல குற்றவாளிஅப்போது திடீரென பொலிஸ் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்தி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டின் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக
தேடப்பட்டு வரும் நபர் எனவும் அந்த நபர் பிரபலமான குற்றவாளி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.