இலங்கையில் எகிறிய வாகனங்களின் விலைகள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் வாகனங்களின் விலைகள் வரலாறு காணாதளவுக்கு எகிறியுள்ளது.
நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளநிலையில் வாகனங்களின் விற்பனை விலையும் தற்போது அதியுச்சம் தொட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலை தற்போது 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் யாரும் வாகனங்கள் வாங்க ஆசைப்படாதீர்கள்; பேரிடியான தகவல்!
அதேபோல முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதுடன் கார்களின் விலையும் 60 முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான விலை விற்பனை ஆகிறது.
இலங்கையில் யாரும் வாகனங்கள் வாங்க ஆசைப்படாதீர்கள்; பேரிடியான தகவல்!
இதற்கு வாகன இறக்குமதி குறைவும், பண வீக்கமும் முக்கிய காரணமாக கூறப்படுகின்ற நிலையில், இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.