அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தற்கொலை – தொடரும் மர்மம்


பிரபல பெங்காலி நடிகையும், மாடலுமான பிதிஷா டி மஜூம்தார் இறந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள அவர் வீட்டில் கண்டறியப்பட்டார். அவரது வீட்டில் இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

21 வயதாகும் இளம் நடிகையான பிதிஷா தி மஜூம்தார் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் காணப்பட்டார். மே 25ஆம் தேதி நடிகையின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காவல்துறையின் அவர் தூக்கில் தொங்கி இறந்திருப்பதை பார்த்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம்
இதற்கிடையே பிதிஷாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர். பிதிஷாவின் வீட்டில் அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது.

அதில், “போதுமான வாயப்புகள் இல்லாத காரணத்தால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர். கையெழுத்து நிபுணரின் உதவியோடு அந்த கடிதத்தை ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலகத்தாவின் வடக்கு புறநகர் பகுதியான நைஹாட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பிதிஷா டி மஜூம்தார். மணப்பெண் வேடத்தில் ஏராளமான போட்டோ ஷூட்டில் பங்கேற்று இவர் பிரபலமாகியுள்ளார்.

அடுத்தடுத்து நடிகைகள் மரணம்

இதையடுத்து பிரபல டிவி நடிகையும், மாடலுமான பல்லவி தே இறந்த அடுத்த சில நாள்களில் மற்றொரு மாடலும், நடிகையுமான பிதிஷா இறந்திருப்பது பெங்காலி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் மாடலிங் துறையை சேர்ந்த பலரும் விதிஷாவின் இறப்புக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *