எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய செயலி

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை பொலிஸ் திணைக்களத்தின் கணினிப் பிரிவு உருவாக்கியுள்ளது.
வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பும் போது, அதன் பதிவு எண் சம்பந்தப்பட்ட செயலியில் உள்ளிடப்படும்.
இதனூடாக குறித்த வாகனம் எரிபொருளை பெற்றுக் கொண்ட தகவல்களை ஏனைய எரிவாயு நிலைய உரிமையாளர்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.
இந்த செயலி பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Related Post

வவுனியா கடவுச்சீட்டு காரியத்தில் தொடர் மோசடி – 6 பேர் கைது
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு [...]

யாழ். வடமராட்சியில் எலும்பு கூடாக கரை ஒதுங்கிய சடலம்
யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்பு
37 வயதான பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான ஒருவர் சடலமாக [...]