கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை


கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.

அதில், தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் மூலம் தனது கையெழுத்தை போலியாக போட்டு, தங்க நகை கடன் வாங்கியுள்ளனர். இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தன்னை அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது 2018-ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து, புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *