நிதி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால், நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியை இன்று ஏற்கவுள்ளதாக அறியமுடிகிறது.