வீணடிக்கப்பட்ட 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள்
மருந்துகளை உரியவாறு களஞ்சியப்படுத்தாமை காரணமாக, 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரனவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்துப் பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் போது, அவற்றில் 99 சதவீதமானவை நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அதனை உடனடியாக களஞ்சியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு, கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு சுகாதார அமைச்சை அறிவுறுத்தியுள்ளது.