காதலனை கொன்ற கணவர் – தற்கொலை செய்த மனைவி

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண், ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்ணின் கணவர் தான், காதலனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது காதலனை கணவர் கொலை செய்ததை அறிந்த அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த பெண்ணின் உடல் பிகானேரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
Related Post

திடீர் தீ விபத்தில் குடியிருப்பு சேதம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் [...]

காதல் விவகாரத்தால் பறிபோன உயிர் – 25 வயது இளைஞன் கைது
அவிசாவளை, பதுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். [...]

நாட்டில் இன்று மின் துண்டிப்பு இல்லை
நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]