வைத்தியசாலைக்கு செல்வதற்கு வாகனம் இல்லை – வயிற்று வலியால் 4 வயது சிறுவன் பலி


வயிற்று வலியால் துடித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனம் இல்லாமையால் சிறுவன் துடித்து துாடித்து உயிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் மஸ்கெலியா – சாமிமலை டீசைட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக சிறுவனின் பாட்டி கூறுகையில்,

வயிற்று வலி காரணமாக தனது மகளின் ஒரே மகனை (8வயது) வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல என்னால் இயன்றவரை முச்சக்கர வண்டி , வாகணங்களைத் தேடியலைந்தபோதும்

எரிபொருள் இல்லாத காரணத்தால் ஒரு வாகணமும் கிடைக்காத நிலையில் 1990 அம்புயூலன்ஸ் மூலம் கொண்டு செல்ல எத்தனித்தபோது அம்புயூலன்ஸில் வந்தவர் சிறுவனை பரிசோதனை செய்தபோது,

சிறுவன் இறந்து விட்டதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து பல சிரமங்களுக்கு மத்தியில் முச்சக்கர வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்தபோது சிறுவன் இறந்து விட்டதால்,

சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைகாக அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு சிறுவனின் உடல் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

என சிறுவனின் பாட்டி தெரிவித்தார். சிறுவனின் தந்தை சிறையில் உள்ளதாகவும் தாய் தோட்டத்தில் வேலை குறைவால் கொழும்பில் பணி புரிந்ததாகவும் குறித்த சிறுவனின் பாட்டி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *