கொழும்பில் உள்ள தமிழர்களின் கடைகளுக்கு ஆபத்தா

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி செயற்படாமல், சில ஊழல் அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டு, நுகர்வோரை சுரண்டும் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் அமைந்துள்ள 196 கடைகளின் பட்டியல் அடங்கிய கடிதம் ஒன்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நான்கு சங்கங்கள் மற்றும் அமைப்புகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் 4வது குறுக்குத் தெரு, 5வது குறுக்குத் தெரு, யோனகா தெரு, வெள்ளவீதி, சென்ட்ரல் தெரு மற்றும் கதிரேசன் வீதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கடைகளின் வணிகத் தன்மை மற்றும் பெயர்களை அந்த பட்டியலில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 15 பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிதத்தை கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களில் பணிபுரியும் சில அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் சிலர் இயக்குனர் ஜெனரல் மற்றும் நிர்வாக இயக்குனர் போன்ற உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் பயன்பெறும் சில கடைகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வாடிக்கையாளர்களை தங்கள் விரும்பிய வகையில் சுரண்டுவதற்கு சில அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும், உடனடியாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.