பாதுகாப்பு தாருங்கள் – பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தனியார் எரிபொருள் விநியோக வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு எரிபொருள் விநியோக நடவடிக்கையில் உள்ள தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் இந்த கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் தாங்கி உரிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காவிட்டால், பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக தாங்கிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.