விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன் பலி
வாகன விபத்தொன்றில் 45 வயதுடைய தாயும் 15 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் கொள்கலன் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வேன் ஒன்று வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது கொள்கலன் லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
மினுவாங்கொடை ஜா-எல வீதியின் அம்பகஹவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகன் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய பெண்ணும் அவரது 15 வயது மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மெடேமுல்ல மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.