புதிய கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடிதங்கள் வழங்குவது 20/05/2022 திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (20) கல்வி அமைச்சில் புதிய கல்வி அமைச்சர் பதவியேற்றதன் பின்னர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.