ஒரு நாளுக்கு தேவையான பெற்றோல் மட்டுமே கையிருப்பில்
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் இன்னும் ஒரு நாளுக்கு மட்டுமே போதுமான பெட்ரோல் இருப்பு இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு தற்போது 92 ரக பெற்றோல் லீற்றருக்கு 84.38 ரூபாவும், 95 ரக பெற்றோல் லீற்றருக்கு 71.19ரூபாவும், டீசல் லீற்றருக்கு131.55 ரூபாவும், சூப்பர் டீசல் லீற்றருக்கு136.31 ரூபாவும் , மண்ணெண்ணெய் லீற்றருக்கு 294.50 ரூபாவும் நட்டம் ஏற்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இனியும் இந்த நஷ்டத்தை தாங்க முடியாது என்று கூறிய அவர், எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் உயரலாம் என்றும் கூறினார்.