தேசிய தலைவரின் வீட்டிலிருந்து ஆரம்பமானது முள்ளிவாய்க்காலுக்கான நடைபவனி
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்.வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு வளாகத்திலிருந்து
முள்ளிவாய்க்கால் நோக்கிய இந்த ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது. முன்னதாக வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,
சர்வமத தலைவர்கள், வெகுஜன அமைப்புக்கள் கலந்துகொண்டுள்ளன.