மனோ கணேசன் வீட்டில் திடீரென நுழைந்த இராணுவம்
அரசாங்கம் பதவி விலகக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரச எதிர்ப்புப் போராட்டப் பகுதியில் திங்கட்கிழமை (09) வன்முறை வெடித்ததுடன், அரசாங்கத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அவர் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது முகநூல் பதிவில்,
‘விரைவில், திம்பு திருவனந்தபுரம் ராணுவ முகாமில் இருந்து வீரர்கள், ஸ்ரீமகாவிஹார சாலையில் உள்ள எனது வீட்டிற்கு வந்து, ‘எனது பாதுகாப்புக்காக’ என்று கூறினர். சற்று முன்னோக்கி; வழக்கமான எம்.எஸ்.டி பொலிஸ் , மேலும் மூவர் வந்தனர். “நன்றி சகோதரர்களே, இல்லை” என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன்.
2005-2009 வெள்ளை வான் நெருக்கடி, கடத்தல் மற்றும் படுகொலைகளின் போது நான் கொழும்பில் அதே வீட்டில் இருந்தேன். இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.