மட்டு, வெல்லாவெளியில் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை


வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 38ம் கிராமம் நவகிரி நகர் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவ்த்துள்ளனர்.

38ம் கிராமம் நவகிரி நகர் பிரதேசத்தைச் நேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான பாஸ்கரன்-திலகவதி என்பவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவராவார்.

குறித்த குடும்பப் பெண் குடும்ப தகராற்றினால் தனது வீட்டு அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டதனை கண்ட குடும்பத்தார் தூக்கில் இருந்து மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *