முல்லைத்தீவில் கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடுபத்தை சேர்ந்த மூவரும் கடலில் மூழ்கிய நிலையில் , இன்று காலை 7.30 மணியளவில் மூன்றாவது சகோதரனின் உடலமானது நாயாற்றுக்கு நேர் மேலேயுள்ள கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பத்மநாதன் விஸ்வநாதன்( 29 வயது), பத்மநாதன் விஜித் (27 வயது), பத்மநாதன் விழித்திரன் (25 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய இரு சகோதரர்களின் உடலங்களையும் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Related Post

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை [...]

“மியான்மரில் வாழ முடியாது” யாழில் கரையொதுங்கிய அகதிகள் கோரிக்கை
யாழ் கடற்பகுதியில் படகொன்றில் தத்தளித்த மியான்மர் பிரஜைகள் 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு [...]

ஜூன் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை
எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க [...]