பொது மக்களை கொடூரமாக தாக்கிய அதிரடி படையினர்
நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமான தாக்கியுள்ளனர்.
நேற்றிரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் மிக மோசமான முறையில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் சிறு பிள்ளைகள் உட்பட கடுமையான தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நேற்று கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், மாணவர்களுக்காக மக்கள் கொண்டு வந்த உணவுகள் மீது நீர்த்தாரை வீசப்பட்டது.
அத்துடன் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்காக பொலிஸார் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளனர்.