பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்
பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை, இந்த நிலை நீடிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தொடருந்து சேவைகள் இன்று முதல் வழமைபோன்று இடம்பெறுவதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உரிய கடமை நேரத்திற்கு சேவைக்கு அறிக்கையிடுமாறு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் எஸ்.பி. வித்தானகே தெரிவித்துள்ளார்.