அம்பாறையில் நீராடச் சென்ற 9 வயது சிறுமியும் 6 வயது சிறுவனும் உயிரிழப்பு

அக்கரைப்பற்று – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் உயிரிழந்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related Post

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக [...]

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி, மற்றும் ஒருவர் காயம்
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் [...]

வாகனம் மற்றும் காணி வாங்குவோருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் [...]