முல்லைத்தீவில் குளம் ஒன்றில் உடலம் மீட்பு

முல்லைத்தீவு தீர்த்தக்கரை வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் உடலம் ஒன்று மிதப்பது பிரதேச வாசிகளால் இனம் காணப்பட்டுள்ளது.
தீர்த்தக்கரை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மனித உடலம் மிதப்பது கிராம மக்களால் இனம் காணப்பட்டு பொலீசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் உயிரிழந்திருக்கலாம். என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றார்கள்.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடலத்தை மீட்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இது யாருடையது என்பது தொடர்பில் இதுவரை இனம் காணப்படவில்லை.
கடந்த மூன்று நாட்களாக 73 அகவையுடைய மாரிமுத்து என்ற வயோதிபரை காணவில்லை. எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
Related Post

யாழில் தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் பலி
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் [...]

இலங்கையில் புதிய வரியால் அதிகரித்த பழங்களின் விலை
பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் [...]

எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (6) முதல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (8) வரை நாளாந்தம் 3 மணிநேரமும் [...]