எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (6) முதல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (8) வரை நாளாந்தம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணிநேரமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் நாளாந்தம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு முன்னுரிமை பகுதிகளுக்கு (CC) மேற்படி காலப்பகுதியினுள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.