அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த புதிய பிரதி சபாநாயகர்
எனக்கு ஆதரவாக ஆளுங்கட்சி வாக்களித்துள்ளபோதும் சுயாதீனமாக செயற்படும் எமது கட்சியின் முடிவு மாறாது என புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் இதில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர் மக்கள் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும். மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம் என்றும் கூறினார்.
மேலும் தனக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி கூறிய அவர், மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேசமயம் எதிரணிகளின் பலத்தை காண்பிக்க இருந்த வாய்ப்பை, எதிரணிகள் தவறவிட்டுவிட்டதாகவும் புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதன்போது சுட்டிக்காட்டினார்.