சில நாட்களுக்கு பேருந்துகள் சேவையில் ஈடுபடாது
நாளைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை மட்டுமல்ல எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில நாட்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.