யாழ் வடமராட்சியில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு – இருவர் கைது

யாழ்.வடமராட்சி – முள்ளிக்காட்டு பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது. புலனாய்வு பிரிவினருக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்த 35 வயது மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CALL NOW