நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு
நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிநுட்ப கோளாறை சரி செய்ய 5 நாட்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டாலும், இதனால் மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.