மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி – வெளியான அதிர்ச்சித்தகவல்


றம்புகணயில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

றம்புகண பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த நிலையில், வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் உரிய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகின்றது.

றம்புகண பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் காயமடைந்துள்ளார். மாணவனின் கை மற்றும் முதுகின் மீது துப்பாக்கி சூட்டு காயங்கள் உள்ளதுடன் துப்பாக்கி சூட்டில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

இந்த மாணவன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்புவதற்காக நகரத்திற்கு செல்கையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் குறித்த மாணவன் எந்த ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது மலைப்பாங்கான பகுதியில் மாணவன் நின்றிருந்ததாகவும், அவரை பொலிஸார் துரத்தி துரத்தி சுட்டதாகவும் மாணவனின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமான தனது மகன் படிக்க கூட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதாக மாணவனின் தாயார் கண்னீருடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *