மலையகத்தில் தொடரும் மழை – மரக்கறிகளின் விலை உயர்வு


மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக இப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில்….

லீக்ஸ் ஒரு கிலோ விலை – 200 ரூபா

பாவக்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபா

வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 190 ரூபா

புடலங்காய் ஒரு கிலோ விலை – 180 ரூபா

தக்காளி ஒரு கிலோ விலை – 360 ரூபா

கோவா ஒரு கிலோ விலை – 320 ரூபா

கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 480 ரூபா

கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 250 ரூபா

நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 290 ரூபா

போஞ்சி ஒரு கிலோ விலை – 600 ரூபா

பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 500 ரூபா

கரட் ஒரு கிலோ விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *