மக்கள் துன்பபடுவதற்கு ஜனாதிபதியே காரணம் – சுதர்ஷனி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனக் கூறியுள்ளார்.

அனைத்து கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று தற்போது ஜனாதிபதி தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். தவறு நடந்துள்ளது என்று கூறினால், ராஜினாமா செய்ய வேண்டும்.

பொருட்களின் விலைகள் வான் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏன் இன்னும் பதவி விலகாது இருக்கின்றார் என்பது எமக்கும் பிரச்சினையாக உள்ளது. என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.