கேகாலை சம்பவம் – காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
றம்புக்கணை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி மேலும் தெரிவித்தார்.