யாழ் நைனாதீவில் அதிசயம்


யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி அம்பாள்.

இந்நிலையில் அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதேசமயம் பக்தர்களுக்கு பரவசத்தையும் அளித்துள்ளது.

நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதிகாலந்தொட்டு இந்த அம்மனை வழிபட்டு வருகிறார்கள். ஆலடி அம்மன் ஆலயம் எனவும் அழைக்கப்படுகிற இவ்வாலயம் ஆரம்பத்தில் சிறியளவில் அமைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இன்று பெரிதாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

இக்கும்பாபிஷேக சிரமதான வேலைகளின்போதே முருகைக்கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று நிலத்திலிருந்து மேற்கிளம்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து தலை பாம்பின் கீழ் காட்சியளிக்கும் இந்த அம்மன் சிலையை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வழிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *