முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது.
அதேசமயம் இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில் இளைஞனின் விபரீத முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.