யாழில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று (4.10.2024) மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அவர்கள் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி போக்குவரத்து பொலிசார் விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வயதான தாயை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பியோடிய பாவிகள்
வயதான தாய் ஒருவர் சாலையில் விடப்பட்ட சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் [...]

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
இன்றையதினம் (4) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் [...]

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் [...]