மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா விளக்கமறியலில்

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தமை, வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர், பணியாளர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினால், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, வாக்குமூலத்தினை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்நது வைத்தியரை பொலிஸார் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related Post

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் [...]

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றவாளி கூட்டில் [...]

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் [...]