இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்
கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த இளைஞன் ஒருவர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 வயதுடைய விகாஷ் தூபே என்ற இளைஞர் கடந்த 40 நாட்களுக்குள்
ஏழு முறை பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளார்.
எவ்வாறாயினும், மருத்துவர்களின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
பாம்பு கடியில் இருந்து தப்பிக்க தான் உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கினாலும் பாம்பு தன்னை தேடி வந்து கடிப்பதாக குறித்த இளைஞன் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரமே பாம்பு தன்னை கடிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.