கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த மூன்று பேர் கிரிப்டோ முதலீட்டு மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர்.
இந்த மூவரும் சுமார் 337000 டாலர்களை இழந்துள்ளனர். இதில் பிரம்டனை சேர்ந்த ஒருவர் சுமார் 226000 டாலர்களை இழந்துள்ளார்.
ஆரம்பத்தில் 1200 டாலர்களை முதலீடு செய்ததாகவும் இரண்டு வாரங்களில் 3000 டாலர்கள் வரையில் அதிலிருந்து கிடைக்கப்பெற்றதாகவும் முகமது ஹக் என்பவர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறு எனினும் பின்னர் தாம் பெருந்தொகை பணத்தை இழக்க நேரிட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த முதலீட்டு திட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பார்த்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறெனினும் இந்த காணொளியானது டீப் ஃபேக் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முதலீடு செய்துள்ள காரணத்தினால் தாமும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ததாக குறித்த நபர் குறிப்பிடுகின்றார்.
எனினும், குறித்த நபர் இந்த கிரிப்டோ முதலீட்டு திட்டத்தில் பெருந்தொகை பணத்தை இழக்க நேரிட்டுள்ளது.
மிஸ்ஸஸாகாவைச் சேர்ந்த டெரல் புட்மிக் என்ற நபர் இந்த மோசடியில் சிக்கி 130,000 டாலர்களை இழந்ததாக தெரிவிக்கின்றார்.
உலகின் பல்வேறு பிரபலங்களின் உருவத் தோற்றத்திற்கு நிகரான செயற்கை நுண்ணறிவு காணொளிகளின் ஊடாக இந்த மோசடியை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.