நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார்.
இதேவேளை, இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.