ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது
ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது..
கொரோனா காலப்பகுதியில் ஏ9 வீதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
அவற்றில் பல சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் நிரந்தர இராணுவ சோதனைச் சாவடியாக இயங்கியது.
இந்நிலையில் குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14) முதல் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.