காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்றமான சூழல்
காலிமுகத்திடலில் அறகலயத்தில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக திரண்டிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தின் போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் ஆரம்பமானதும் காலி முகத்திடல் மைதானத்தில் கூடியிருந்தவர்களை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆனால், அந்த உத்தரவை போராட்டக்காரர்கள் ஏற்காததால், அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் மற்றும் கலவர தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.