வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவுள்ளன.
டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன.
வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Post

களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது
முகநூல் வாயிலாக பியகம – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட [...]

மரக்கறியுடன் சென்ற லொறி விபத்து – 14 பேர் படுகாயம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை [...]

மின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு
மின்வெட்டு காலப் பகுதி 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் [...]