யாழில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு – நபர் ஒருவர் கைது
இரு பாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும் சந்தேக நபரின் வீட்டின் கோழி கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் கடந்து பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.