பல்கலைக்கழகத்தில் தாக்குதல்- மாணவி உட்பட இருவர் காயம்
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று திங்கட்கிழமை (2024.02.12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.