மட்டக்களப்பில் சிறுவன் மாயம் – முச்சக்கரவண்டி மீது சந்தேகம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனொருவன் காணமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நேற்று (01) காலை சைக்கிளில் உணவகம் ஒன்றிற்கு செல்லும் போது முச்சக்கரவண்டியொன்றில் மோதியுள்ளார். இந்தநிலையில் முச்சக்கரவண்டிக்கு சிறு சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி சிறுவனை தடுத்து வைத்துள்ளார்.
குறித்த சிறுவன் நீண்ட நேரம் வீடு வராததால் சிறுவனின் தந்தை தேடிய போது, சிறுவன் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து முச்சக்கரவண்டி சாரதியிடம் மகனைப்பற்றி விசாரித்தபோது, சிறுவனை தடுத்து வைத்து விட்டு அனுப்பிவிட்டேன் என சாரதி பதிலளித்துள்ளார்.
இதற்கமைய சிறுவனின் தந்தை சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related Post

வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பு
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் [...]

கிளிநொச்சியில் ஆலயத்தின் உள் காடையர் அட்டூழியம் – 4 இளைஞர்கள் படுகாயம்
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு [...]

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் [...]